in

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இருக்கிறதோ? அந்த கூட்டணி வெற்றி பெறும்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இருக்கிறதோ? அந்த கூட்டணி வெற்றி பெறும்

 

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அங்கம் வசிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேட்டி.

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்டு 24-ஆம் தேதி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெறவிருக்கும் சமூக சமத்துவ மாநாட்டிற்கு சமுதாய மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் சுற்றுபயணத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர், ஜான்பாண்டியன் கொடைரோடு அருகே, இந்திரா நகரில் சமுதாய மக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து மாநாட்டிற்கு அழைத்தார். அப்போது,அவர் செய்தியாளரிடம் பேசுகையில்,

துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுத்தால், துப்புரவு பணியாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். அடிப்படை உரிமைகளுக்காக போராடும் துப்புரவு பணியாளர்களை அகற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன்,

ஆணவக் கொலைக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது தனி சட்டம் இயற்ற வேண்டும், ஆணவக் கொலை தமிழ்நாட்டின் நடக்கக் கூடாது. மாண்புமிகு முதலமைச்சர் சட்டத்தை கடுமையாக்கி அதனை நிறுத்த வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கேட்டுக் கொள்கிறது.

நிலக்கோட்டை தொகுதியில் நான் போட்டியிடுகிறேனா? என, 2026 சட்டமன்ற தேர்தலில் பொறுத்து இருந்து பாருங்கள். இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இருக்கிறதோ? அந்த கூட்டணி வெற்றி பெறும்.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதே ஒரு சில காவல்துறை அதிகாரிகள்தான்,திட்டமிட்டு சில தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனை அரசு கூர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.


பேட்டியின் போது, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர்கள் முத்து ரத்தினவேல், ஸ்டாலின், மாவட்டத் தலைவர் முருகவேல் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணகுமார், நிலக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் தேவா,தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

What do you think?

மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு