நந்தினி சொல்றது 100% உண்மை, மத்தவங்களை விளையாட விடுறது இல்ல
பிக்பாஸ் சீசன் 9-ல செமயா பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருந்த நந்தினி, எதிர்பாராத விதமா எவிக்ட் ஆகி வெளிய வந்திருக்காங்க.
ஆனா வெளிய வந்த உடனே சும்மா இல்லாம, வீட்டுக்குள்ள நடக்குற “உள்குத்து” மேட்டர்களை புட்டு புட்டு வச்சிருக்காங்க.நந்தினி மெயினா சொல்ற விஷயம் “குரூபிசம்”.
“வீட்டுக்குள்ள ஒரு குறிப்பிட்ட கேங் இருக்கு. அவங்க யாரை டார்கெட் பண்ணனும்னு பிளான் பண்ணி விளையாடுறாங்க. நான் அவங்க பேச்சுக்கு தலையாட்டல, அவங்க கேங்குக்கு செட் ஆகல. அதனாலயே எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி (சதி செஞ்சு) என்னை வெளிய அனுப்பிட்டாங்க,”னு ஓப்பனா சொல்லியிருக்காங்க.
“நான் எப்போவுமே நேர்மையா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா மத்தவங்க ‘ஸ்ட்ராட்டஜி’ங்கிற பேர்ல மத்தவங்களோட கேமை மொத்தமா கெடுக்குறாங்க. நான் வெளிய வந்தது கூட எனக்கு வருத்தமில்லை, ஆனா என்னை வெளிய அனுப்புன விதம் ரொம்ப தப்பு,”னு செம ஆதங்கத்தோட பேசியிருக்காங்க.
நந்தினியோட இந்த பேட்டிக்கு அப்புறம் சோஷியல் மீடியா ரெண்டா பிரிஞ்சிருக்கு: “நந்தினி சொல்றது 100% உண்மை, அந்த கேங் மத்தவங்களை விளையாட விடுறது இல்ல.
“”விளையாடத் தெரியாம வெளிய வந்துட்டு, இப்போ மத்தவங்க மேல பழி சொல்றாங்க.” கடைசியா, தனக்கு சப்போர்ட் பண்ண எல்லா ரசிகர்களுக்கும் ஒரு பெரிய “தேங்க்ஸ்” சொல்ல மறக்கல நந்தினி.


