in

“எனக்கு என்ன தெரியும்? எல்லாம் நன்மைக்கே!” – ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் விமல் ஓப்பன் டாக்!


Watch – YouTube Click Shorts

“எனக்கு என்ன தெரியும்? எல்லாம் நன்மைக்கே!” – ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் விமல் ஓப்பன் டாக்!

 

மதுரையில ஒரு பாராமெடிக்கல் காலேஜ் பொங்கல் விழாவில கெஸ்ட்டா போன விமல், ஸ்டூடண்ட்ஸோட சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கிட்டு அப்புறம் பிரஸ்ஸை மீட் பண்ணாரு.

அப்போ நடந்த சுவாரசியமான உரையாடல் இது: சின்ன படங்களுக்கு சென்சார்ல பிரச்சனை வருதேன்னு கேட்டதுக்கு: “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க.. நான் நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன், என் படங்களும் ரிலீஸ் ஆகிட்டுதான் இருக்கு.

படம் நல்லா இருந்தா சின்ன படமா இருந்தாலும் சரி, பெரிய படமா இருந்தாலும் சரி.. மக்கள் கண்டிப்பா கொண்டாடுவாங்க.

“இப்போ அதிகமா அரசியல் படங்கள் வர்றதை மக்கள் விரும்புறாங்களான்னு கேட்டதுக்கு: “அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுங்க.. யார் யாருக்கு என்ன தோணுதோ, அவங்க அவங்க இஷ்டப்படி படம் எடுக்குறாங்க.

அது மக்களுக்குப் பிடிச்சிருந்தா ஓடும்,”னு சிம்பிளா முடிச்சுட்டாரு. “நீங்க கில்லி, குருவி-ல விஜய் கூட நடிச்சிருக்கீங்க.. அவரோட கடைசிப் படம் ரிலீஸ் ஆகாம இப்படித் தள்ளிப் போயிட்டே இருக்கே?”னு கேட்டதுக்கு:

ஆமாங்க.. நான் அவர் கூட நடிச்சிருக்கேன். ஆனா ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி ஏன் மாறுது, அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு எதுவும் தெரியாதுங்க. இதப்பத்தி என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்ல முடியும்? என்கிட்ட எனக்குத் தெரிஞ்ச கேள்வியைக் கேளுங்க.

” எ”கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.. எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே-னு நினைச்சுக்க வேண்டியதுதான்!” விமல் இப்போ சிம்புதேவன் சார் இயக்கத்துல ஒரு படம் நடிச்சுட்டு இருக்காராம்.

அதுபோக ‘ஏழாம் பொருத்தம்’, ‘வடம்‘னு கைவசம் சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்குறதா சொல்லிருக்காரு.

What do you think?

கும்மியடித்து பொங்கல் விழாவை தூய்மை பணியாளர்கள்

ஜெயிலர் 2′ படத்தின் சீக்ரெட்டை உடைத்த….விஜய் சேதுபதி சொன்ன ‘சீக்ரெட்’!?