ThugLife முதல் நாள் வசூல் இவ்ளோதானா
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தக்Life திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
ThugLife கர்நாடகாவை தவிர உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தரம் இல்லாத கதையை மணிரத்தினம் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றி விட்டார்.
கதையில் ஆழம் இல்லாததால் ரசிகர்களின் விருப்பம் மிஸ்ஸிங், தலைப்புக்கும் வேடங்களுக்கும் உணர்ச்சிபூர்வமான தொடர்பு இல்லை, தியேட்டருக்கு போவதை விட வீட்டிலேயே தூங்குறது பெட்டர் …இன்னு சிலர் Comments செய்திருகின்றனர்..
மணிரத்னத்தின் பாணி கமல்ஹாசனின் நடிப்புடன் ஒத்துபோகவில்லை சங்கர் கமலை இந்தியனில் வெச்சு செஞ்சார்.... இப்போ மணிரத்தினமும் கமலை வீணாக்கி விட்டார்.
கமல்ஹாசன் போன்ற ஒரு ஜாம்பவான் படத்தை எடுக்கும் போது… லோகேஷ் அளவிற்கு யோசிக்க வேண்டும் .கமலும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டார் படத்தில் சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான விஷயமும் சுவாரசியமும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.
லோகேஷ் கனகராஜ் போட்ட உழைப்பே கூட மணிரத்தினம் போடதாது வருத்தமே ரசிகர்களின் இரண்டு மணி நேரம் 45 நிமிடத்தை வேஸ்ட் செய்து விட்டார் மணி.
இந்திய அளவில் ThugLife 17 கோடியை முதல் நாளில் வசூல் செய்திருக்கிறது வெளிநாட்டில் 20 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.