நாட்டரசன்கோட்டை ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
நாட்டரசன்கோட்டை அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் விழா
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை நகர் மைய பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவர்கள் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கன்னிகாதானம் மாலை மாற்றும் வைபவம் மற்றும் பட்டு சேலை பட்டு வஸ்திரம் உற்சவ தெய்வங்களுக்கு சாற்றி வேத மந்திரங்கள் முழங்க இரு தாயாருக்கும் திருமங்களையம் அணிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் வாரணம் ஆயிரம் நடத்தி உற்சவ தெய்வங்களுக்கு நட்சத்திர ஆரத்தி கும்ப ஆரத்தி கற்பூர ஆரத்தி மற்றும் ஷோடச உபசாரங்கள் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வங்களின் திருக்கல்யாணத்தை கண்டு வழிபட்டனர்.


