in

நாங்கள் தனியாக இல்லை எங்களுக்கு அனைவரின் ஆதரவும் இருக்கிறது


Watch – YouTube Click

நாங்கள் தனியாக இல்லை எங்களுக்கு அனைவரின் ஆதரவும் இருக்கிறது

 

பிக் பாஸ் நிகழ்ச்சி…இல் பங்கேற்ற வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தனது அம்மா வனிதா விஜயகுமார் எழுதிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை தயாரித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜோவிகா கண்கலங்கி பகிர்ந்ததாவது இந்த நேரத்தில் நான் விஜய் டிவிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் சொந்த உழைப்பில் நான் சம்பாதித்த பணத்தை வைத்து தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறேன்.

பிக் பாஸில் எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி.

ஜோவிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பார்த்திபனிடம் உதவி இயக்குனராக Teens படத்தில் பணி புரிந்தார்.

இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார். வெளிநாட்டில் ஷூட்டிங் எடுத்தபொழுது கேரவன் மற்றும் அடிப்படை வசதி கூட இல்லாமல் படப்பிடிப்பை நடத்தினோம் படம் பிடிப்பில் கலந்து கொண்ட அனைவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு பெருமையாக இருக்கிறது என்று அவர்களுக்கு நன்றி கூறினார்.

நாங்கள் தனியாக இல்லை எங்களுக்கு அனைவரின் ஆதரவும் இருக்கிறது என்று இப்பொழுது உணர்கிறேன் என்று கண்ணீருடன் கூறினார்.

மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் வனிதா விஜயகுமார் உடன் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார்.

What do you think?

சிரஞ்சீவி நடிக்கும் தனது 157 வது படத்தில் ஜோடியாக நயன்தாரா

சினமா  செய்திகள்