கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் – பி ஆர் பாண்டியன் பேட்டி
தனியார் கொள்முதல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட நெல்லுக்கு 10 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்காமல் அமைச்சர் சக்கரபாணி மதுரை மண்டலத்துக்குள் வந்தால் விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் -பி ஆர் பாண்டியன் பேட்டி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;-
தமிழக அரசு உழவனைத் தேடி என்கின்ற திட்டத்தை காவிரி டெல்டாவின் மைய மாவட்டமான திருவாதூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை குறிப்பாக 2021ல் 2500 ருபாய் குவிண்டால் ஒன்றுக்கும், கரும்பு டன் ஒன்றுக்கு நாலாயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார்கள்.
காப்பீடு திட்டத்திற்கான இழப்பீடு தொகையை முழுமையாக பெற்று தருவோம் என்றும் சொன்னார்கள். இழப்பினை பெற்று தருவதற்கு தற்போது வரை முன் வரவில்லை.
முதல்வர் துவக்கி வைத்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் மற்றும் 10 ஒன்றியங்கள் உள்ளது பத்து வேளாண் இயக்குனர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். ஒன்பது இடங்கள் காலிப்பணியிடங்களாக உள்ளது.
50 ஆண்டு காலமாக விவசாயிகள் நேரடி கொள்முதல் நுகர் பொருள் வாணிக கழகம் செயல்பட்டு வருகிறது. திமுக பொறுப் பேற்றவுடன் இதனை தனியாருக்கு தாரையில் பார்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அமிர்தின் ஷேக் தாவூத் என்பவர் வேளாண் துறையில் அரிசி கூட்டமைப்பு என்ற பதிவை பெற்றுக் கொண்டு ராமநாதபுரம், விருதுநகர், சென்னை சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு 800 கோடி ரூபாய் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குழப்படிகளில் இருந்து வருகிறது மீண்டும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளிடம் வாங்கிய மக்களை திருப்பி வழங்கியுள்ளார்.
இனி அந்த நிறுவனத்திற்கு நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அதில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
தரமான அரிசி பொது விநியோகத் திட்டத்திற்கு விநியோகம் செய்ய வேண்டும் என நடவடிக்கை எடுத்த சண்முகசுந்தரம் ஐஏஎஸ் அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
அமைச்சர் சக்கரபாணி விவசாயிகளை பாதுகாப்பதற்கு பதிலாக தனியார் நிறுவனத்தை பாதுகாக்க முயற்சி எடுக்கிறார்கள் தவிர விவசாயிகளை வீதியில் போராடுவதற்கு தள்ளியுள்ளார். இதனால் அமைச்சர் மீது சந்தேகம் எழுகிறது.
அமைச்சர் சக்கரபாணியை மதுரை மண்டலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள், மிகப்பெரிய ஊழலுக்கு அமைச்சர் சக்கரபாணி பொறுப்பேற்க வேண்டும்
தனியார் கொள்முதல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட நெல்லுக்கு 10 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்காமல் வாக்கு கேட்டு வந்தால் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முதல் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கும் பாதுகாப்பு உள்ளதா இருந்தால் அச்சம் என்பது அதனால் தமிழக அரசு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை இதற்காக கேட்டு பெற வேண்டும். அணைக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை மக்கள் கருத்தரிந்து செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக கார்ப்பரேட்டுக்கு ஆதரவான ஆட்சியாக திமுக செயல் படுவதை ஏற்க மாட்டோம் தனியார் கொள்முதல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல்லுக்கு தொகையை செலுத்த வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் செயல்பட்டால் அவரை மதுரை மண்டலத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் கிராமங்கள் தோறும் கருப்பு கொடியைக் காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பு குழு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.