பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத விசாக நட்சத்திர அபிஷேக ஆராதனை.
நாமக்கல் மாவட்டம் – பரமத்தி வேலூர் – பொத்தனூர் – மேற்கு வண்ணாந்துறையில் உள்ள பச்சைமலையின் மேல் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத செவ்வாய்க்கிழமையுடன் உடன் விசாக நட்சத்திரத்தினை முன்னிட்டு.
பால தண்டாயுதபாணி சுவாமிக்கு. பஞ்சகவ்யம், பால், தயிர், இளநீர், சந்தனாதி தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, தேன், நாட்டு சக்கரை, கரும்பு பால், அரிசி மாவு, மா, பலா, வாழை, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பேரிச்சம்பழம், திராட்சை, எலும்மிச்சை மற்றும் வாசனை திரவியங்களான பன்னீர், சந்தனம், சொர்ண அபிஷேகமுடன் கலச அபிஷேகம் போன்ற 27 வகையான அபிஷேகங்கள் செய்து வெட்டிவேர் மாலையுடன் சுப்பிரமணியர் அலங்காரம் செய்து சோடஷ உபசாரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பல வகை வாசனை மலர்களால் 108 அஷ்டோத்திர மந்திரங்களினால் அர்ச்சனை செய்து, அடுக்கு ஆரத்தி, பஞ்ச ஆரத்தி, ஏக ஆரத்தியுடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது


