in

விநாயகர் சதுர்த்தி விழா – மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தி விழா – மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை

 

உலகமெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் அனைத்து பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இயல்பாகவே மதுரை மல்லிகை பூ 300 முதல் 600 வரை விற்பனை செய்யபட்டு வரும் நிலையில் இன்று 4 மடங்கு விலை உயர்ந்து கிலோவுக்கு 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக 1 கிலோ மதுரை மல்லிகை பூ கிலோ 2500 ரூபாயும், முல்லைப் பூ 1000 ரூபாய்க்கும், செவ்வந்தி, பிச்சி – 1000, கனகாம்பரம் – 1000, அரளி – 600, பட்டன் ரோஸ் – 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிகைப் பூ 300 முதல் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதே போன்று
முல்லைப் பூ 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாயிலிருந்து 600 ரூபாய்க்கும், பிச்சி 250 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கும், செவ்வந்தி 150 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கும், கனகாம்பரம் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 150 ரூபாயிலிருந்து 300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What do you think?

காலை உணவு விரிவாக்க திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் துவக்கி வைத்தார்

ஒரு கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்த விஜய்