in

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் விழுப்புரம் மாவட்ட சரக டிஐஜி ஆய்வு

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் விழுப்புரம் மாவட்ட சரக டிஐஜி ஆய்வு

 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் மாதந்தோறும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில் பக்தர்கள் எந்த ஒரு அசம்பாவிதங்களும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் விழுப்புரம் மாவட்ட சரக டிஐஜி உமா தலைமையில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன், செஞ்சி உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ், மேல்மலையனூர் ஆய்வாளர் வினதா மற்றும் திருக்கோயில் உதவி ஆணையர் சக்திவேல் அரங்காவலர் குழு தலைவர் சேட்டு (எ) ஏழுமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் திருக்கோயிலில் உள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபம், திருக்கோயில் பிரகாரம், அம்மன் பாதம், கம்பத்துக்கள் மானியம் , தற்காலிக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பை கருதி பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களை ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி உதவி ஆணையர் சக்திவேல் அவர்களிடம் தெரிவித்து சென்றனர்.

What do you think?

திருப்பரங்குன்றம் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா

பிரபல நடிகர் ஹரிஷ்கல்யாண் மற்றும் பிரபல நடிகை அதுல்யா ஆகியோர் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்….