in

வருவாய் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

வருவாய் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

 

மன்னிப்பள்ளம் கிராமத்தில் விதிமுறையை மீறி வெளி நபர்களுக்கு குளத்தில் மண் எடுக்க அனுமதி அளித்த வருவாய் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், திமுக மாவட்ட செயலாளர் தூண்டுதல் பெயரில் திமுகவினருக்கு முறைகேடாக அனுமதி வழங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா, சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மன்னிப்பள்ளம் கிராமத்தில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் ஊருக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது.

இந்த குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு ஊத்துக்கு போய் ஊராட்சியின் முன்னாள் தலைவரும் திமுக பொறுப்பாளருமான ராஜ்குமார் என்பவருக்கு வட்டாட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு, உள்ளுறை சார்ந்த விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம் ஆனால் விதிமுறைகளை மீறி வேறு கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகருக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வண்டல் மண் எடுப்பதாக தெரிவித்து திமுக பிரமுகர் ராஜ்குமார் டாரஸ் லாரிகளில் குளத்தின் ஆழத்திலிருந்து மணலை எடுத்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதாக தெரியவருகிறது.

இந்நிலையில் மணல் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்திய பகுதி பொதுமக்கள் முறைகேடாக அனுமதி வழங்கிய வட்டாட்சியரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் ஆதரவின் பேரில் முறைகேட்டில் அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மணல் எடுப்பதை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

What do you think?

 பூண்டிமாதா பேராலய அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா

சிதம்பரத்தில் பாச கயிறுடன் சாலைக்கு வந்த எமதர்மராஜா