ராஜமௌலி… யின் SSMB29 படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்
பான் இந்தியா இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் மகேஷ் பாபு நடிக்கும் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்க படுகிறது…
எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை “SSMB29” என்ற தற்காலிகப் பெயரில் இயக்குகிறார்,
இரண்டு பகுதிகளாக வெளியிடுவதற்கான முந்தைய பரிசீலனைகள் இருந்தபோதிலும், தற்போது இந்த படம் ஒரே பாகமாக திட்டமிடப்பட்டுள்ளது.
2027 கோடையில் ₹1000 கோடி பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகிஇருக்கிறது.
மகேஷ் பாபுவைத் தவிர, இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் மகேஷ்பாபு..இக்கு அப்பாவாக நடிக்க விக்ரம் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு விக்ரம் மறுத்துவிட்டார். தற்பொழுது மாதவன் அப்பாவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கென்யாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.