விக்ரம் பிரபு…வின் Love marriage…. இனிமையான நகைச்சுவைத் காதல்
விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் மற்றும் மீனாட்சி தினேஷ் நடிப்பில் இயக்குனர் சண்முக பிரியனின் Love Marriage, தெலுங்கு படமான ‘அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
வயது கடந்த ஒரு இளைஞருக்கு திருமணம் ஆகவில்லை என்றால் அவரைப் பார்த்து மற்றவர்கள் பேசும் ஏளன பேச்சும், பெற்றோர்கள் தன் மகனுக்கு எப்பொழுது திருமணம் ஆகும் என்ற ஏக்கமும் தன்னை எந்த பெண்ணாவது திருமணம் செய்து கொள்ள மாட்டாளா என்று தவிக்கும் ஒரு இளைஞனின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட லவ் ஸ்டோரி திரைப்படத்தை மக்கள் லவ் பண்னார்…களா என்பதை பார்ப்போம் .
33 வயதாகும் விக்ரம் பிரபுவிற்கு திருமணம் ஆகவில்லை சொந்தத்தில் கூட அவருக்கு பெண் கொடுக்க முன் வராததால் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு சென்று விக்ரம் பிரபுவுக்கு பெண் எடுக்கிறார்கள்.
நிச்சயதார்த்தம் செய்ய பெண் வீட்டிற்கு செல்லும் பொழுது அவர்கள் சென்ற வண்டி பழுதாகி விட்டதால் அன்று இரவு அங்கேயே தங்கும் நிலை ஏற்படுகிறது. மறுநாள் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட வேறு வழியின்றி மாப்பிள்ளை வீட்டினர் அங்கே தங்குகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்ணிடம் பழகலாம் என்று விக்ரம் பிரபு நினைக்க கதாநாயகியோ வேறொருவரை காதலிப்பதாக தெரிய வருகிறது.
காதலன் வேறு ஜாதி என்பதால் தனது மகளை விக்ரம் பிரபுவிற்கு மனம் முடிக்க திட்டமிடுகிறார் நாயகியின் தந்தை கல்யாண நாள் அன்று நாயகி வீட்டை விட்டு தன் காதலனுடன் உடன் ஓடி விடுகிறார்.
இந்த செய்தியை கேட்ட விக்ரம் பிரபு மயக்கம் போட்டு விழுகிறார் அதன் பிறகு என்ன நடந்தது என்பது லவ் மேரேஜ் கதை. விக்ரம் பிரபுவிற்கு இந்த பாத்திரம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது Script… யை மிஞ்சும் வகையில் நடித்து திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.
மீனாட்சி தினேஷ் மிகவும் கிளுகிளுப்பான ஒரு பாத்திரத்தில் துடிப்பாகத் நடித்திருக்கிறார். ரமேஷ் திலக், கஜராஜ் மற்றும் அருள்தாஸ் ஆகியோருக்கு பொருத்தமான துணை வேடங்கள் கொடுக்கப்படிருகிறது.
மற்ற நடிகர் நடிகைகளும் நன்றாகவே நடித்துயிருகின்றனர். விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் மந்தமாக செல்வதால் சுவாரஸ்யம் குறைகிறது ஜாதியா? பெற்ற மகளா? என்ற தருணத்தில் தனக்கு பெண் தான் முக்கியம் என்று காதலித்தவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
பழைய கதை தான் என்றாலும் நகைச்சுவையாக எடுத்துச் சென்று இருக்கின்றனர் இசையமைப்பாளர் sean Roldan பின்னணிசையிலும் பாடலிலும் கலக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் கிராமத்து காட்சிகள் கண்னுக்கு குளுமை ஆனால் எடிட்டிங்… இல் கோட்டை விட்டுவிட்டனர். இப்பொழுது வரும் படங்கள் எல்லாம் எடிட்டிங் இல் சொதப்பி விடுவதால் திரைக்கதைக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது லவ் மேரேஜ் என்ஜாய் பண்ணலாம்.


