விஜய் சேதுபதி இளம்பெண் புகார்
விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் நல்ல வசூலை கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் விஜய் சேதுபதி பற்றி தவறாக வந்த ஒரு வீடியோவால் தலைவன் தலைவி வசூல் குறைந்திருக்கிறது.
திட்டமிட்டு இந்த நேரத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர் என்று ஒரு சிலர் கூறிவரும் நிலையில் அந்த வீடியோவிற்கான விளக்கத்தை விஜய் சேதுபதி கொடுத்துள்ளார்.
ரம்யா மோகன் என்ற ஒருவர் x…தளத்தில் விஜய் சேதுபதி ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக சுரண்டியதாகவும் அதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்பொழுது மறுவாழ்வு மையத்தில் இருபதாகவும் விஜய் சேதுபதி கேரவனுக்கு வர பெண்களுக்கு இரண்டு லட்சம் கொடுப்பார் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு வெகு சீக்கரத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து திடீரென்று அந்த பதிவு நீக்கப்பட்டது. விஜய் சேதுபதியை பலர் தொடர்பு கொண்டு இதற்கான விளக்கத்தை கேட்ட பொழுது விஜய் சேதுபதியும் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
என்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும் இந்த விஷயத்தைகேட்டு அவர்களே சிரிப்பார்கள்.மேலும் என்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் ஆனால் என் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த பதிவினை பார்த்து வருத்தப்பட்டார்கள்.
இந்த குற்றச்சாட்டை பற்றி எனக்கு வருத்தம் இல்லை அந்தப் பெண் பலரின் கவனத்தை ஈர்க்கவும் விளம்பரத்திர்காகவும் இப்படிப்பட்ட வீடியோவை வெளியிட்டிருகிறார்.
சில மணி நேரம் புகழ் அவருக்கு கிடைத்திருக்கும் அதனால் அவருக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கும் அனுபவித்து போகட்டுமே இது போன்ற எந்த குற்றச்சாட்டும் என்னை பாதிக்காது, சட்ட படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்


