ரசிகர்களை ஏமாற்றிய விஜய்
வருகின்ற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் வர இருப்பதால் ஜனநாயகன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் நடிகர் விஜய்யின் அதிரடி முடிவு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்தியது.
எச். வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில் அப்டேட் கிடைக்குமா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு நடிகர் விஜய் யின் அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்தது.
தனது பிறந்த நாளன்று எந்த அப்டேட்டும் வெளியிட கூடாது என்றும் படபிடிப்பின் கடைசி நாளில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிடக்கூடாது என்றும் கூறிவிட்டாராம்.
படம் ரிலீஸ் ஆவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு படத்தை பற்றின அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறார்.
இதற்கு காரணம் தனது ரசிகர்களும் தொண்டர்களும் அரசியலில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக விஜய் இந்த முடிவு எடுத்துள்ளாராம்.