ஆதிவாசிகள் …என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்ட விஜய் தேவரகொண்டா
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற பொழுது சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.
பஹல்கம்..மில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அவர் பேசினார். பாகிஸ்தானுக்குள்ளேயே அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்.
500 வருடத்திற்கு முன்பு ஆதிவாசிகள் அடித்துக் கொண்டது போல் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள் என்று பேசினார் ஆதிவாசிகள் என்று அவர் பயன்படுத்திய வார்த்தைகள் பழங்குடியின மக்களை புண்படுத்துவதாக பல அமைப்புகள் அவருக்கு எதிராக சர்ச்சையை கிளப்பினர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கண்டனம் வலுக்கவே அதற்கு வருத்தம் தெரிவித்த விஜய் தேவரகொண்டா ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் நான் எந்த உள்நோக்கத்துடனும் பழங்குடியினரை தரக்குறைவாக குறைத்து மதிப்பீடும் நோக்கில் பேசவில்லை என்னுடைய நோக்கம் நம்முடைய ஒற்றுமை, தேச பாதுகாப்பு குறித்ததாக மட்டுமே இருந்தது.
உதாரணத்திற்காக நான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் யாரையும் அவமதிக்க வேண்டும் என்று நான் பேசவில்லை என்னுடைய வார்த்தைகள் யாரேனும் புண்படுத்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.