புதிய காட்சிகளுடன் விடுதலை பாகம் 2 மீண்டும் OTT…இல்
விஜய் சேதுபதியின் விடுதலை பாகம் 2 திரைப்படம் OTT தளத்தில் ஜனவரி 19 ஆம் தேதி வெளியானது.
வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றாகும்.
மேலும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விடுதலை படத்தின்’ தொடர்ச்சி Amazon பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது.
மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ், ராஜீவ் மேனன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை படத்தின் பாகம் 2 ஏற்கனவே அமேசான்OTT தளத்தில் வெளியான நிலையில் தற்போது சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடிய இப்படம் தற்பொழுது 3 மணி நேரம் 7 நிமிடங்களாக மாற்றப்பட்டு மீண்டும்ott..யில் வெளியாகிறது.