புதியமாவட்ட செயலாளர் வீர திராவிட மணி நியமனம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதிவாரியாக மாவட்ட செயலாளர்கள் புதிய நிர்வாகிகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவிப்பு
இதில் விருத்தாசலம் தொகுதி புதிய மாவட்ட செயலாளராக வீர திராவிட மணியை கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தொகுதி மாவட்ட செயலாளர் வீர திராவிட மணி தலைமையில் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் வெங்கள திருவருசிலைக்கு மாலையனைத்து மரியாதை செய்தனர்.


இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகர செயலாளர் மணலூர் முருகன் அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தினார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி வடக்கு ஒன்றிய செயலாளர் திருஞானம் வழக்கறிஞர் தன்ராஜ் தென்றல் அய்யாதுரை விஜயகுமார் எழில்வான் சிறப்பு கண்ணன் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற .
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் முனைவர் துரைரவிக்குமார் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சனாதன சங்கபரிவார் கும்பலை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்.


மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது அப்படி நடந்தால் விடுதலை சிறுத்தைகள் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்து கண்டன ஆர்ப்பாட்டம் உரையாற்றினர்.
இந்தநிகழ்ச்சியில் முன்னாள் மையம் மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் கிட்டு கடலூர் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் நெய்வேலி தொகுதி மாவட்ட செயலாளர் மருதமுத்து திட்டக்குடி தொகுதிமாவட்ட செயலாளர் பாலமுருகன் மண்டல செயலாளர் பரிசு முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டித்து உரையாற்றினார்கள்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐயாயிரம் பூக்கடை ரவி மாநில மகளிரணி செயலாளர் பழனியம்மாள் முன்னாள் மண்டல செயலாளர் ராஜ்குமார் சத்தியவாடி பாஸ்கர் வயலூர் இளங்கோவன் வீரமணி மேட்டு காலனி வீரமணி பூந்தோட்டம் தனசேகர் சதீஷ் உள்ளிட்ட மாவட்ட நகரம் ஒன்றியம் முகாம் நிர்வாகிகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


