கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள், திருக்கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் தரிசனம்
கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் திருக்கோவில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்த அத்திவரதர்.
கும்பகோணத்தில் கோவில் நகரமான அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனியே திருக்கோயில்கள் அமைந்து சிறப்பு வேறு எங்கும் காண முடியாது, அந்த வகையில், வட இந்தியாவில் பிர்மனுக்கு என தனித்கோயில் உள்ளது போன்று தமிழகத்தில் திருபட்டூருக்கு அடுத்து 3வதாக, பிர்மனுக்குரிய தலமாக விளங்குவது கும்பகோணத்தில் அமைந்துள்ள வேதவல்லி தாயார் சமேத வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலாகும்.
பிரசித்தி பெற்ற பிர்மன் கோயில் என போற்றப்படும் இத்திருக்கோயிலுக்கும் இதன் அருகேயுள்ள மற்றொரு வைணவத்தலமான பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் திருக்கோயில் இக்கோவிலில், அத்திமரத்தினால் உருவாக்கப்பட்ட, அத்திவரதை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
கடந்த 1915ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013ம் ஆண்டு, அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை, சுமார் ஒன்றரை அடி உயரத்தில், அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர், பாதாள அறையில் இருந்து எடுத்து வரப்பட்டு, தைலகாப்பு அலங்காரம் செய்து, சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, சௌராஷ்ட்ரா பக்தர்களின் பார்வைக்காக கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டது.
நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விழா நாட்களில் தைலகாப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறுகிறது.


