in

ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி வைரம் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி வைரம் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே, சிறுகளத்துார் ஊராட்சி, கெலட்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வைரம் என்ற வைரமுத்து(45) இவர் A1+ பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் தனி தொகுதிக்கு போட்டியிட, இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல ரவுடி வைரம் புதியதாக அம்பேதாகர் மக்கள் நீதி இயக்கம் துவங்கி, சுயேச்சையாக ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜியிடம், இன்று 500க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,என் மீது 11 வழக்குகள் உள்ளது அனைத்தும் நகல் உடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 6300 வாக்கு பெற்றேன்,

ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி என்பது 11000 வாக்கு தான் யாரு வெற்றி என்று தீர்மானிக்கிறது,தற்போது மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என வைரம் பேட்டி அளித்தார்.

What do you think?

காய்கறி மார்க்கெட் முதல் கருணாநிதி சிலை வரை மூன்று கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தூத்துக்குடி விமான நிலையம் வருகை  ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து பூங்கொத்து கொடுத்தனர்.