காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம்
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம் முன்னிட்டு வரதர் தங்க யாளி வானத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், வைகாசி பிரம்மோத்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டிற்கான பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது .
இதில், தினமும், காலை, மாலையில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்து பல்வேறு முக்கிய வீதி வழியாக வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதில், 5 வது நாள் உற்சவமான இரவு தங்க யாளி வாகனத்தில் வரதராஜ பெருமான் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வடகலை தென்கலை பிரிவினர்களுக்கிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் நடைபெறாமல் இருக்க அவர்கள் பாராயணம் பாடும் போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.