வடிவேலுவின் அலப்பறையான காதலர் தின வாழ்த்து வீடியோ வைரல் பிரபுதேவா-வடிவேலு ரிட்டர்ன்ஸ்!
நம்ம இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இப்போ தமிழ் சினிமாவுல செம பிஸியா இருக்காரு.
‘கோட்’ படத்துல தளபதி கூட சேர்ந்து அதிரடி காட்டினவரு, இப்போ ஒரு மரண மாஸ் அப்டேட்டோட வந்திருக்காரு. அது வேறொன்னும் இல்ல… நம்ம ‘வைகைப்புயல்’ வடிவேலு கூட 23 வருஷம் கழிச்சு பிரபுதேவா கைகோர்த்திருக்காரு!
இன்னைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு, பிரபுதேவா அவரோட எக்ஸ் (Twitter) பக்கத்துல ஒரு க்யூட் வீடியோவைப் பகிர்ந்துருக்காரு:
ரெண்டு பேரும் ஜாலியா நடந்து வர்றாங்க. அப்போ பிரபுதேவா, “நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை” பாட்டைப் பாடச் சொல்ல, வடிவேலு அவரோட அந்த ஐகானிக் வாய்ஸ்ல பாடிக் கிட்டே நடந்து வர்றாரு.
இந்த வீடியோவை போட்டு எல்லாருக்கும் காதலர் தின வாழ்த்து சொல்லிருக்காரு பிரபுதேவா.
ஆல்ரெடி பொங்கல் அன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‘ஒர்க்-அவுட்’ பண்ற வீடியோ வந்து வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி பண்ணாத அலப்பறையா? ‘காதலன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’னு ஆரம்பிச்சு இவங்க பண்ண காமெடி லிஸ்ட் ரொம்பப் பெருசு.
விவேக் – வடிவேலு – பிரபுதேவா மூணு பேரும் சேர்ந்து பண்ணின அந்த காமெடி கலாட்டாவை யாராலயும் மறக்க முடியாது.
கடைசியா இவங்க ரெண்டு பேரும் இந்த படத்துல தான் ஒன்னா நடிச்சாங்க. இப்போ கரெக்டா 23 வருஷம் கழிச்சு சாம் ரொட்ரிகஸ் இயக்கத்துல, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கப்போற படத்துல இந்த அதிரடி கூட்டணி இணையுது!


