வறுமையில் வாடும் வடிவேலு பாலாஜியின் குடும்பம்
சின்னத்திரை பிரபலங்களின் பேமஸான நபர் வடிவேலு பாலாஜி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானவர் வடிவேலு பாலாஜி.
>
சிரிச்சா போச்சு, ராஜு வீட்ல பார்ட்டி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 வில் பங்கேற்றார். அப்பொழுது உடல்நலம் காரணமாக திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உயிரிழந்தார்.
வடிவேலு பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த் அண்மையில் ஒரு பேட்டியளித்து ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அப்பா இல்லாமல் கஷ்டப்படுவது உண்மைதான் அப்பா இருந்தவரை எந்த கஷ்டமும் தெரியாமல் என்னை வளர்த்தார் அவர் மறைந்த பிறகு எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.
இப்போது நான் ஒரு வண்டி வாங்கினேன் அதற்கு இஎம்ஐ கூட என்னால் கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறேன்.
அப்பா இருந்தால் கஷ்ட பட விட மாட்டார் எனது ஆசை என் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.


