in

வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உறியடி உற்சவம்

வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உறியடி உற்சவம் 

 

நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி உற்சவம் வலுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் ஆகியவை ஒன்றிணைந்த நாள் நேற்றைய தினம் வந்த சூழலில் வைகாணச ஆகம முறைப்படி கோகுலஸ்மி விழா பல்வேறு வைணவஸ்தலங்களில் நேற்றைய தினம் கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கோகுல ஸ்மி விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட சூழலில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக பல்வேறு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடைபெற்றது தொடர்ந்து மாலையில் புன்னை மர வாகனத்தில் வரதராஜ பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மேளதாளம் வழங்க சன்னதி தெருவிற்கு எழுந்தருளிய பெருமாள் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறி அதன் உச்சியில் கட்டப்பட்டிருந்த பண முடிப்பை எடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலம் நடைபெற்றது பின்னர் மூன்று இடங்களில் கட்டப்பட்டிருந்த ஒன்பது கலசங்களுடன் கட்டப்பட்ட உறியை ஆட்டம் பாட்டத்துடன் இளைஞர்கள் அடித்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து பெருமாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பயணியர் நிழற்குடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர் எ.வ.வேலு

பாஜக கூட்டணி ஆட்சி அமையும்…மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி