ஆடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம்
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சி வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் கெளரி மண்டபத்தில் மாவட்ட செயலாளர் முல்லைவளவன், தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர் கலக்கல் கண்ணன், தொண்டரணி மாநில துணைச் செயலாளர் கே பி எஸ் செல்வம், மேலிட பொறுப்பாளர் அமுதா இனியன், மாவட்ட துணைச் செயலாளர் தேவி திருமா, மாவட்ட அமைப்பாளர்கள் சின்ன ஜெயப்பிரகாஷ், ராக ராம, ஒன்றிய செயலாளர் தென்னவன், ஒன்றிய பொருளாளர் ராஜா, ஊடகம் ஐயா மாவட்ட அமைப்பாளர் மணி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் புரட்சியாளன், பாசறை மாவட்ட அமைப்பாளர் ராஜா சுந்தர், நகர ஒருங்கிணைப்பாளர் முகமது அனிபா, ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்டாலின், மாவட்ட துணை செயலாளர் முகில் விக்னேஸ்வரன், தொழிலாளர் விடுதலை முன்னணி பொறுப்பாளர் விஜயகுமார், திருபுவனம் பேரூர் செயலாளர் அருமைதுறை, திருவிடைமருதூர் செயலாளர் தமிழரசன், ஆடுதுறை பேரூர் செயலாளர் தமிழ்ச்செல்வன், பேரூர் பொருளாளர் தளபதி சுரேஷ், பேரூர் துணைச் செயலாளர்கள் காளிதாஸ், வினோத் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் வருகிற 24 எழுச்சித்தமிழர் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள விருதுகள் வழங்கும் விழாவிற்கு நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கலந்து கொள்வது என்றும், நீதிமன்றம் உத்தரவு என்ற பெயரில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பங்களை மற்றும் பேனர்களை அகற்றிவரும் காவல்துறை நடவடிக்கை கைவிட வேண்டும்.
வருகிற 24-ஆம் தேதி கலைஞர் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கோட்டு சூட்டுடன் கலந்து கொள்வதும் என்றும் மத சார்பன்மை பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த தலைவர் எழுச்சி தமிழருக்கு இக்கூட்டம் பாராட்டியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டன.