செஞ்சி கோட்டையை வரலாற்று சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ
செஞ்சி கோட்டையை வரலாற்று சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததில் செஞ்சி பகுதி மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையினை கடந்து வருடம் செப்டம்பர் மாதம் மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டை முழுவதும் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்தனர் …
இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக செஞ்சி பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அறிவிப்பானது நேற்று இரவு வெளியான நிலையில் செஞ்சி பகுதி மக்கள் மட்டும் இன்றி வரலாற்று ஆய்வாளர்களும்,வர்த்தக நிறுவனத்தினர் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செஞ்சிக்கோட்டையை வரலாற்று சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததில்
தற்போது அப்பகுதியில், இளைஞர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

இதனால் செஞ்சி பெரிய சுற்றுலா தளமாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த திட்டமானது தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


