நெட்டிசன்களின் ட்ரோல்..லை தாங்க முடியாமல் அமிதாப் பச்சனின் குரலை நீக்கிய அரசாங்கம்
ஜூன் 26, வியாழக்கிழமை முதல், பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனின் குரலில் சைபர் கிரைம் விழிப்புணர்வு காலர் டியூனை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
யாராவது ஒருவர் தொலைபேசியில் அழைக்கும் ஒவ்வொரு முறையும் நடிகர் அமிதாப் பச்சனின் குரல் ஒலிக்கும்.
அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து குடிமக்களை எச்சரிப்பதே இதன் நோக்கம். பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது, எனவே, இன்று முதல் காலர் டியூன் அகற்றப்படும்,” என்று அரசாங்கம் தெரிவித்தது.
குறிப்பாக அவசரகால சூழ்நிலைகளில், காலர் டியூன் உடனடி இணைப்பை தாமதப்படுத்தியது. எரிச்சல் அடைந்த மக்கள் அமிதாப் பச்சன்..னை சமூக ஊடகங்களிலும் செமையாக ட்ரோல் செய்து கலாய்த்தனர்.
சமீபத்தில், ஒரு ரசிகர் தொலைபேசியில் பேசுவதை நிறுத்துங்கள் என்று பச்சனுக்கு ட்வீட் செய்ய அதற்கு அரசாங்கத்திடம் சொல்லுங்கள், அவர்கள் சொன்னதைச் செய்தேன் என்று பதிலளித்தார்.
மற்றொருவர் வயதை வைத்து கலாய்க்க.. நீங்களும் ஒருநாள் முதுமை அடைவீர்கள் என்று பதிலடி கொடுத்தார்.
மக்களின் தொடர் புகார்களின் காரணமாக நடிகர் அமிதாப் பச்சனின் குரல் இடம்பெறும் சைபர் கிரைம் விழிப்புணர்வு voice மெசேஜ் இன்று முதல் நிறுத்தப்பட்டது.
ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்கும் முன்பும் ஒலிக்கும் 40 வினாடி காலர் Tune இனி ஒலிக்காது.