in

மரக்காணம் அருகே வெள்ளை மண் தோன்றும் குழியில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

மரக்காணம் அருகே வெள்ளை மண் தோன்றும் குழியில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பெரிய மண்டவாய் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் வீரா ஆகிய இருவரின் மகன்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வெற்றிச்செல்வன் (14) மற்றும் சித்திரஞ்சன் (14) ஆகிய இருவர்கள் இன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று தனது உடைகளை மாற்றிக் கொண்டு வீட்டின் அருகே உள்ள கனிமவளத் துறையின் மூலம் டெண்டர் விடப்பட்டு வெள்ளை மண் எடுக்கும் குவாரியில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குறித்து தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அப்பகுதியில் வெள்ளை மணல் அதிக பள்ளம் தோண்டி எடுப்பதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்..

What do you think?

சீகன்பால்கு நினைவு அரங்கம் அரசு அறிவித்த இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பேரணியாக வந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:-

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை ஒட்டி,விருத்தாசலத்தில் தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.