பார்த்திபனைப் பிரித்து மேய்ந்த த்ரிஷா! விஜய் – த்ரிஷா விவகாரம், என்ன நடந்தது? தக்க பதிலடி!
சமீபகாலமா சோசியல் மீடியாவுல விஜய் – த்ரிஷா மேட்டர் தான் பயங்கர ஹாட் டாபிக். ஏஜிஎஸ் கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் ஒரே கார்ல, ஒரே கலர் டிரெஸ்ல ஜோடியா வந்து இறங்குன வீடியோ இன்னும் வைரல் ஆகிட்டு இருக்கு.
இது ஒரு பக்கம் இருக்க, இப்போ இந்த விவகாரத்துல இயக்குநர் பார்த்திபன் சொன்ன ஒரு கமெண்ட் புது சர்ச்சையைக் கிளப்பிருக்கு.சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில கலந்துகிட்ட பார்த்திபன் கிட்ட, த்ரிஷாவோட போட்டோவைக் காட்டி கருத்து கேட்டாங்க. அதுக்கு அவரோட பாணியிலயே, “இந்த குந்தவையை (த்ரிஷா) வெளியே விடாம, வீட்டுக்குள்ளேயே கொஞ்ச நேரம் குந்த வைப்பது (உட்கார வைப்பது) நல்லது.
அப்போதான் நிறைய பிரச்சினைகள் வராம இருக்கும். சில கவிதைகளை ரசிக்கலாம்.. ஆனா அதை வெளியே சொல்லாம இருக்குறது தான் நல்லது”னு கொஞ்சம் குசும்பா பேசினாரு.
இது விஜய் – த்ரிஷா சர்ச்சையை மறைமுகமா தாக்குற மாதிரி இருந்ததால, சோசியல் மீடியாவுல பெரிய விவாதமா மாறுச்சு.பார்த்திபன் இப்படிப் பேசுனது த்ரிஷாவோட காதுக்குப் போக, மனுஷி செம காண்டாயிட்டாங்க. உடனே தன்னோட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில ஒரு பதிவைப் போட்டாங்க:
“அந்த நிகழ்ச்சியில ஒரு நடிகர் தன்னோட உதவியாளர் மூலமா சொல்லித் தான், கடைசி நேரத்துல என் போட்டோவையும் பேச்சையும் சேர்த்திருக்காங்கன்னு எனக்குத் தெரியும்.” “ஒரு மைக்ரோபோன் கிடைச்சா புத்திசாலித்தனமா பேசலாம்.. ஆனா, சில பேர் அதை வச்சு தங்களோட முட்டாள்தனத்தை தான் வெளிய காட்டுறாங்க. அறிவில்லாம பேசுற அசிங்கமான வார்த்தைகள், அந்தப் பேசுற ஆளோட தரத்தை தான் காட்டுது”னு நறுக்குனு பதிலடி கொடுத்திருக்காங்க..
இதுக்கிடையில, த்ரிஷாவை விஜய்யுடன் தொடர்புபடுத்தி அருவருப்பா பேசுனதா சொல்லி நயினார் நாகேந்திரன் மேலயும் ஒரு பக்கம் கண்டனங்கள் குவிஞ்சுட்டு வருது. மொத்தத்துல விஜய் – த்ரிஷா விவகாரம் இப்போ கோலிவுட்ல பெரிய ‘ஈகோ’ வாராவே மாறிடுச்சு!


