in

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது

காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலின் 28 பேர் கொல்லப்பட்டனர்.

இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கணவன் உடல் அருகே பெண் அமர்ந்திருந்த காட்சி காண்போரின் இதயத்தை சுக்கு நூறாக உடைக்கும் விதமாக அமைந்தது.

நாடு முழுவதிலும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை காந்தி மியூசியம் முன்பு அதன் தலைவர் குருசாமி தலைமையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 நபரின்  படத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட படத்துக்கு முன்பு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

What do you think?

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்ச்சவ தோ்த் திருவிழா

வாலாஜாபாத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா