மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட அவலம்
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட அவலம்…..
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை ஆன்மீக நகரத்திற்கு ஒன்பது சாலைகள் மூலம் பொது மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒன்பது சாலைகளிலும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் சாலையோரத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள 50 ஆண்டு பழமையான புளிய மரம், வேப்ப மரம், புங்க மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வேரோடு வெட்டி சாய்க்கும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து சாலைகளிலும் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டு வருவதால் மரங்கள் இல்லாமல் வழுக்க தலை போல் சாலை காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு மரத்தை வெட்டினால் கூட மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாக சேர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராங்களை நடத்தியனர்.
ஆனால் தற்போது பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கும் போது ஒருவர் கூட வாய் திறக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.


