in

குத்தாலத்தில்  வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டம்

குத்தாலத்தில்  வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டம்

 

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், வர்த்தகர்கள் இடையே கடும் மோதல், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு, சாலை மறியல் போராட்டம் மற்றும் கடை அடைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே இந்து அறநிலை ஆட்சித் துறைக்கு சொந்தமான மன்மத ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் அடிமைகள் உள்ள நிலையில் அங்கு உள்ள தனியார் பேக்கரி ஒன்றின் இடம் தொடர்பான பிரச்சனை இந்து அறநிலை துறை மற்றும் பேக்கரி உரிமையாளருக்கும் இடையே கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த இடம் தொடர்பான பிரச்சனையில் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று இந்து அறநிலை ஆட்சித் துறை துணை ஆணையர் ராணி தலைமையில் ஆலய செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பிரச்சனைக்குரிய கடையை சீல் வைக்க முயற்சி செய்தனர்.

அப்போது அடிமனைபயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்த பிரச்சனை தொடர்பாக ஆர்டிஓ விசாரணையில் இருக்கும் பொழுது எப்படி சீல் வைக்கலாம் என்று அதிகாரிகளை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர்.

வணிகர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கடைக்காரருக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது, இந்து அறநிலைய ஆட்சித்துறை ஊழியர்கள் திடீரென்று தாக்குதல் முயற்சி ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கடுமையாக கைகளால் தாக்கி கொண்டனர் தொடர்ந்து அங்கு இருந்த நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தனித்தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இந்து அறநிலைய ஆட்சித்துறை துணை ஆணையர் வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டு சாலை மறியல் நடைபெற்று வருவதால் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது. அரசு அதிகாரிகள் ரவுடிகள் போல் நடந்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What do you think?

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடை மழை

சிங்கனூர் ஸ்ரீ லஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் சித்திரை மாத வைபவம்