in

டூரிஸ்ட் Family ” படம் அல்ல, ஒரு அனுபவம்… நிச்சயம் பார்க்க வேண்டிய படம்…நம்பி தியேட்டருக்கு செல்லலாம்


Watch – YouTube Click

டூரிஸ்ட் Family ” படம் அல்ல, ஒரு அனுபவம்… நிச்சயம் பார்க்க வேண்டிய படம்…நம்பி தியேட்டருக்கு செல்லலாம்

துப்பாக்கி சத்தம், ரத்தம், தீவிரவாதம், ஆக்‌ஷன், வன்முறை படங்களால் சோர்ந்தவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தின் ‘..னின் டூரிஸ்ட் ஃபேமிலி’.

தர்மதாஸ் (சசிகுமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), அவர்களது இரண்டு குழந்தைகள் நிதுஷன் (மிதுன் ஜெய் சங்கர்) மற்றும் முல்லி (கமலேஷ்) இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், அவர்கள் சட்டவிரோதமாக படகில் ஏறி இந்தியாவுக்குள் நுழைகிறார்கள்.

அவர்கள் தனுஷ்கோடியில் சிக்கிக் கொள்கிறார்கள், காவல்துறையினரால் பிடிக்கப்படுகிறார்கள். ஆனால், முல்லியின் அப்பாவித்தனமும் கூர்மையான அறிவும் அவர்கள் தப்பிக்க உதவுகின்றன.

சிம்ரனின் அண்ணன் யோகி பாபுவின் உதவியால் சென்னை வருகிறார்கள்.  குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாக சந்தேகிக்கும் இலங்கை குடும்பங்களைத் தேடும் பணியில் இருக்கும் காவல்துறையினரிடம் அகப்பட்டு கொள்கிறார்களா? காவல்துறையினர் அவர்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுவார்களா? அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா? டூரிஸ்ட் Family இரண்டு மணி நேரம் 10 நிமிடங்களில் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது.

சசிகுமார் அமைதியாகவும் அருமையாகவும் தனக்கே உண்டான பாணியில் நடித்திருக்கிறார். குழந்தைகளைப் பொறுத்தவரை, முல்லி (கமலேஷ் ஜகன்) சிறப்பாக நடித்து அவ்வப்போது சிரிப்பை வரவழைத்து, காட்சிகளின் தீவிரத்தை உடைக்கிறார்.

கமலேஷ் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர், சிம்ரனும் சசிகுமாரும் சரியான ஜோடியாக ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடித்திருகின்றனர்.

இருவரும் நகைச்சுவையிலிருந்து சீரியஸ்…சான காட்சிக்கு எளிதாக மாறுகிறார்கள். M.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகி பாபு, பகவதி, சுதர்ஷன், ரமேஷ் திலக் என அனைவரும் தங்களது நடிப்பின் முலம் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் பாடல்கள் மனதுக்கு இதம், சான் ரோல்டன் பின்னணி இசை படத்திற்கு மிக பெரிய பிளஸ். அறிமுக இயக்குனர் ..இன்னு சொல் முடியாதா அளவிற்கு அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும் படம்.

Screenplay…வை அருமையாக கையாண்டிருகார் வாவ்! என்ன ஒரு அருமையான கதை, இயக்குனரின் எழுத்து மற்றும் திரைக்கதை மிகச் சிறப்பாக இருக்கிறது ஒவ்வொரு காட்சியையும் , உணர்ச்சி ரீதியாக அமைத்திருக்கிறார்.

சசிகுமார் நடிப்பால் மீண்டும் ஒரு தரமான குடும்ப படத்தை வழங்கி இருகிறார். ” டூரிஸ்ட் Family ” என்பது வெறும் படம் அல்ல, அது ஒரு அனுபவம் – உறவுகள், மரபுகள் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் ஒரு அழகான படம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் தனது அண்டை வீட்டாரையும் மனிதநேயத்தையும் நேசிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிற படம். நிச்சயமாக உங்கள் அன்புக்குரியவர்களுடன் சென்று பார்க்க வேண்டிய படம்!. மக்கள் ஆதரவு கொடுத்தால் அருமையான படைப்பை இயக்குனர்களும் தொடர்ந்து கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.


Watch – YouTube Click

What do you think?

HIT 3…. தியேட்டரில் ஹிட் ஆகுமா? கொடூரத்தின் உச்சம்.. HIT 3 Movie Review

பிரபல ராப்பர் ‘ஜன நாயகன்’ படத்தில் இணைத்துள்ளார்