in

லாரிகள் மூலம் டன் கணக்கில் அனுப்பும் உப்பு 

லாரிகள் மூலம் டன் கணக்கில் அனுப்பும் உப்பு 

 

நாகை அடுத்த வேதாரண்யத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சமையல் உப்பு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது லாரிகள் மூலம் டன் கணக்கில் அனுப்பும் பணியில் உப்பள உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த அகஸ்தியன் பள்ளியை சுற்றியுள்ள கோடியக்காடு கோடியக்கரை கடினல் வயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கரில் உணவு உப்பு மற்றும் ரசாயன உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடத்தில் உள்ளது வேதாரண்யத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பில் கால்சியம் அளவு குறைவாக உள்ளதால் இங்கு உற்பத்தி ஆகும் உப்பிற்க்கு தனி சிறப்பு உண்டு.

ஒரு ஆண்டில் கோடைகாலமான ஆறு மாத காலம் மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெறும் நடப்பாண்டு உப்பு உற்பத்தி தொடங்கிய மாதம் முதலே தொடர் மழையின் காரணமாக உற்பத்தி பெருமளவில் சரிவை சந்தித்தது இதுவரை 25 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே கோடை காலம் உள்ள நிலையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்கிற நிலையில் மீதமுள்ள 75 சதவீதம் உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தொடர் மழையின் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட உப்பு மலைகள் போல் குவித்து பனை ஓலையில் மூடி உப்பினை உற்பத்தியாளர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த நிலையில் தற்சமயம் கடந்த 5 நாட்களாக மழை விட்டு உள்ளதால் அந்த உப்பினை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பும் பணியில் உப்பு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சுமார் 3,000 ஏக்கரில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்து வைத்திருந்த சமையல் உப்பினை அயோடின் கலந்து சிறு பாக்கெட்டுகள் ஆகவும் மூட்டையாகவும் தயார் செய்து லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் சில ஆயிரம் டன் உப்பு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கோர்ட் தீர்ப்பு சாதகமாக இருந்தாலும்… கர்நாடகாவில் ThugLife வெளியிட முடியாது

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பு.