நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடும் சூரிய பூஜை
கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடும், சூரிய பூஜை சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
முற்கால சோழர்களால் கட்டப்பட்ட பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் பெரியநாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் சூரியன் தனது ஒளிமங்கி அமாவாசை சந்திரனை போல கலங்கி நின்ற போது அசரீரியின் கூற்றுப்படி சூரிய தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி ஸ்ரீ நாகேஸ்வரரை வழிப்பட்டதால் தன் சாபம் நீங்கப்பெற்றார்.
அது முதல் ஆண்டு தோறும் தமிழ் மாதம் சித்திரை 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களை இறைவன் மீது படரச்செய்து பூஜிக்கும் காட்சியே சூரிய பூஜையாகும், சூரியனுக்கு இறைவன் ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கரசேத்திரம் என்ற பெருமையும் உண்டு
இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் விசுவாவசு ஆண்டு தமிழ் சித்திரை மாதம் 11ம் நாளான இன்று காலை சூரிய உதயத்தின் போது சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது தீபாராதணை செய்யப்பட்டது.
ஸ்ரீ நாகேஸ்வர சுவாமிக்கும், ஸ்ரீ பெரியநாயகி, நடராஜ பெருமான் மற்றும் தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சூரிய பகவானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்