in

திருவண்ணாமலை மாசி மகத்தையட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி…

திருவண்ணாமலை மாசி மகத்தையட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி…

 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு…

திருவண்ணாமலையில் மாசி மகத்தையொட்டி திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கிராமத்திலுள்ள துரிஞ்சல் ஆற்றின் கௌதம நதிக்கரையில் தன்னை அண்ணாமலையார் மகனாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் தீர்த்தவாரி செய்து திதி கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கௌதம நதிக்கரையில் நீராடி தங்களது முன்னோருக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா அண்ணாமலையாரின் தீவிர பக்தர். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் குழந்தை வரம் கேட்டு அண்ணாமலையாரை வேண்டிய போது தானே குழந்தையாக இந்த பிறவியில் தங்களுக்கு இருப்பேன் என அண்ணாமலையார் தெரிவித்ததாக ஐதீகம்.

இதனைத் தொடர்ந்து வரல மகாராஜா தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தைப்பூச தினத்தன்று அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் போது வள்ளாள மகாராஜா இறந்துவிடுவார்.

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று தீர்த்தவாரிக்கு அண்ணாமலையார் சென்று திரும்பும் போது வல்லாள மகாராஜா போரில் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்படும். இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் மேளதாளங்கள் இல்லாமல் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று விடுவார்.

தொடர்ந்து 30ம் நாளான மாசி மாத மக நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் துரிஞ்சல் ஆற்றின் கௌதம நதிக்கரையில் தந்தையாக பாவித்த வல்லாள ராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

இதனைத்தொடர்ந்து மாசி மக நட்சத்திரமான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையார் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு காட்சி அளித்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கௌதம நதிக்கரையை வந்தடைந்தார்.

இதனை தொடர்ந்து வல்லாள மகாராஜாவுக்கு கௌதம நதிக்கரையில் திதி கொடுக்கும் நிகழ்வானது நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து துரிஞ்சல் ஆற்றில் சூலத்திற்கு பால் தயிர் பன்னீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துரிஞ்சல் ஆற்றில் நீராடி தங்கள் இறந்து போன முன்னோர்களுக்கு திதி கொடுத்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

What do you think?

கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவம் தேரோட்டம்