திருப்பதி ஏழமலையான் கோயில் பிரம்மோற்சவம் சர்வ பூபாலா வாகனம்
திருப்பதி ஏழமலையான் கோயில் பிரம்மோற்சவம் நான்காம் நாள் சர்வ பூபாலா வாகனத்தில் பகாசுர வதை அலங்காரத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதிஉலா.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மலையப்பசுவாமி, சர்வபூபால வாகனத்தில் பகாசுர வதை அலங்காரத்தில் காட்சியளித்தார்.

வாகனத்தின் முன்னே யானைகள் அணிவகுத்து நடந்து செல்ல, பக்தர்கள் கூட்டம் பஜனைகள், நடனங்கள் மற்றும் ஜீய்யங்கார்களின் கோஷ்டியுடன் சுவாமியைப் புகழ்ந்து, மங்கள வாத்தியங்களுக்கு மத்தியில் சுவாமியின் வாகனசேவை கோலாகலமாக நடைபெற்றது.


