ThugLife சிறப்பு காட்சி..இக்கு அனுமதி
Pan இந்தியா Movie..யாக உருவாகியிருக்கும் ThugLife திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிடோர் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.
நாளை திரைக்கு வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கமல் மன்னிப்பு கேட்கவும் கர்நாடக நீதிமன்றம் அறிவுறுத்தியது மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட முடியாதென்று நீதிமன்றம் திட்டுவட்டமாக அறிவித்துள்ளது.
ஆனால் கர்நாடகாவிலும் கமலுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் ThugLife திரைப்படத்தை அங்கு திரையிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக குழு அறிவித்துள்ளது.
கமலஹாசனுடன் பேச்சு வார்த்தை நடத்தி இப்ப படத்தை வெளியிட தயாராக இருக்கிறோம் என்று தலைவர் நரசிம்மர் கூறியிருக்கிறார்.. இதற்கு கமல் இசைவாரா என்று தெரியவில்லை மேலும் ThugLife திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை ஒரு நாள் மட்டும் ஐந்து காட்சிகள் வெளியிடவும் படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.