ரசிகர்களுக்கு Bad News கொடுத்த ThugLife பட குழுவினர்
கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ThugLife திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருக்கிறார்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் மே 14ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ரிலீஸ் நெருங்கி வருவதால் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜிங்குச்சா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஆடியோ லான்ச்…சை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் சோகமான தகவல் ஒன்றை Production தரப்பு வெளியிட்டிருகிறது.
காஷ்மீர் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் ஏற்படுத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் முகம் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இரண்டு நாடுகளுக்கு இடையே உருவாக்கி இருக்கும் இந்த பதட்டமான சூழ்நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால் வரவிருக்கும் ஆடியோ லான்ச் விழாவை கேன்சல் செய்வதாக ThugLife பட குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
ஆடியோ லான்ச் நடைபெறுமா நடைபெறாதா என்ற தகவல் தேரியவில்லை . மேலும் இந்த சூழ்நிலையில் வரவிருக்கும் திரைப்படங்களும் ரத்தாகலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.