in

மதுராந்தகம் வடதிருநள்ளார் சனீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுராந்தகம் வடதிருநள்ளார் சனீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு 2 1/2 வருடத்திற்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்.

நேற்று காலை 8.30 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியானார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் எள்ளு முடிச்சு விளக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து சனிபகவானை வழிபட்டனர்.

 

மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மற்றும் எள்ளுருண்டை வழங்க வழங்கினர்.மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும்
நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

கோயில் வளாகத்தில் பிர பிரம்மாண்டமாக நவதானியங்களால் செய்யப்பட்ட அம்மனும், சனீஸ்வர பகவானும் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்காக தாரை தப்பட்டை நிகழ்வு, ஆன்மீக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரனை வணங்கி சென்றனர்.

What do you think?

12ம் ஆண்டு ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் சந்தன விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்