விஷாலின் காதலி இவர்தான்
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் 46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் ஒரே நடிகர் விஷால்.
இவர் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் தனக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும் தான் காதலிக்கும் பெண் யார் என்பதை தனது பிறந்தநாள் அன்று வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் யார் என்று விவரம் வெளியாகி உள்ளது.
அவர் நடிகை சாய் தன்ஷிகா இவர் பேராண்மை படத்தில் நடித்துள்ளார். மேலும் பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் காதல் உண்டாகி தற்பொழுது திருமண வரை சென்றிருகிறது. சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள யோகி டா திரைப்படத்தின் விழா இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்கிறார்.
அந்நிகழ்வின்போது இவர்களது திருமண தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


