ஜன நாயகன் படத்தில் விஜய்..யின் Character பெயர் இதுதான்
தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒரு முக்கிய செய்தி ஜன நாயகன் படக்குழு..வில் இருந்து வெளிவந்திருகிறது.
படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரத்திற்கு “தளபதி வெற்றி கொண்டான்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விஜய்யின் கதாபாத்திரத்தை தனது கையில் “TVK” என்ற முதலெழுத்துக்களுடன் ஸ்டைலாக பச்சை குத்தி இருக்கிறார் .
முதலெழுத்துக்கள் அவரது கதாபாத்திரத்தை மட்டுமல்ல, ஆழமான அரசியல் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.
படம் ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகையுடன் இணைந்து பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர், இசையமைகிறார் .
ஜனநாயகன் என்பது 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வெற்றிப் படமான பகவந்த் கேசரியின் தமிழ் தழுவல் என்று கூறப்படுகிறது. விஜய்..யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.