பாசத்துல ரசிகர்கள் செஞ்ச இந்த ‘ஆரத்தி’ காரியம்
டைரக்டர் மாருதி இயக்கத்துல பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால்னு ஒரு பெரிய பட்டாளமே நடிச்சு இருக்குற படம் தான் ‘தி ராஜா சாப்’.
இந்த ஹாரர்-காமெடி படம் ரிலீஸ் ஆன அன்னைக்கு ஒடிசாவில இருக்குற ஒரு தியேட்டர்ல தான் இந்த ‘பகீர்’ சம்பவம் நடந்திருக்கு.
படம் ஆரம்பிச்சு, பிரபாஸ் ஸ்கிரீன்ல மாஸா என்ட்ரி கொடுத்திருக்காரு. அவரோட என்ட்ரியை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகத்தோட உச்சத்துக்குப் போயிட்டாங்க.
ஸ்கிரீன் முன்னாடி போய் பட்டாசுகளை வெடிச்சிருக்காங்க, விளக்குகளை ஏத்திப் பிரபாஸோட படத்துக்கு ‘ஆரத்தி’ எடுத்திருக்காங்க. அந்த நேரத்துல எதிர்பாராத விதமா நெருப்பு தியேட்டர் சீட்டுல பிடிச்சு எரிய ஆரம்பிச்சிருக்கு.
ஒரு நிமிஷத்துல தீ மளமளன்னு பரவ ஆரம்பிச்சதும் அங்கிருந்த ரசிகர்கள் “ஐயோ.. அம்மா..”னு அலறி அடிச்சுட்டு வெளிய ஓடினாங்க.
தியேட்டர் ஊழியர்கள் உடனே அலர்ட் ஆகி தீயை அணைச்சதுனால ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
யாருக்கும் அடிபடல, ஆனா தியேட்டரே புகையால நிரம்பிப் போய் ஒரே கலாட்டாவாகிடுச்சு. பிரபாஸ் மேல இருக்குற பாசத்துல ரசிகர்கள் செஞ்ச இந்த ‘ஆரத்தி’ காரியம், இப்போ அந்தத் தியேட்டரையே ஒரு போர்க்களம் மாதிரி மாத்திடுச்சு.
இந்த வீடியோ இப்போ சோஷியல் மீடியாவுல பயங்கர வைரல் ஆகிட்டு வருது.


