திருவிடைக்கழி முருகன் ஆலயம் செவ்வரளி மாலை சூடி முருகன் சிறப்பு அலங்காரம்
திருவிடைக்கழி முருகன் ஆலயத்தில் சித்திரை மாத செவ்வாய்க்கிழமை முன்னிட்டு செவ்வரளி மாலை சூடி முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழியில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அசுரனைக் கொன்ற பாவம் தீர முருகன் சிவ வழிபாடு செய்த ஆலயமான இங்கு கருவறையில் சிவனும் முருகனும் ஒன்றாக காட்சியளிக்கின்றனர்.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ள இந்த ஆலயத்தில் சித்திரை மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து செவ்வரளி மாலை சூடி முருகப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.