சிவஞானபோதம் தெளிபொருள் விளக்கம் எனும் நூலை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டு
ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் அருளிய சிவஞானபோதம் தெளிபொருள் விளக்கம் எனும் நூலை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டு 5000 பொற்கிழியும் வழங்கி அருள் ஆசி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே புகழ் பெற்ற திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்தில் ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் குருபூஜை விழா ஆதீனத்தில் உள்ள மறைஞான தேசிகர் தபோவனத்தில் நடைபெற்றது.
முன்னதாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தலைமை மடத்தில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் இரவு பூஜை செய்து வழிபாடு செய்தார்.
பின்னர் பூஜையின் நிறைவில் விழாமலர் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு திமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். விழாமலராகிய ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் அருளிய சிவஞானபோதம் தெளிபொருள் விளக்கம் எனும் நூலை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டார்.
நூலை வெளியிட்டு முதல் பிரதியை சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கினார்.அதனைத் தொடர்ந்து கைலாசபுரம், தலைவாசல் சைவ சித்தாந்த பயிற்சி மைய பேராசிரியர் மணிகண்டனுக்கு ரூபாய் 5000 பொற்கிழியும் சித்தாந்தச் செம்மணி எனும் விருதும் வழங்கி அருள் ஆசி வழங்கினார்.
அப்போது, சுவாமிநாத ஓதுவா மூர்த்திகள், திருவாவடுதுறை ஆதீன மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஓய்வு மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


