in

பழனி அருணகிரிநாதர் கோவிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா

பழனி அருணகிரிநாதர் கோவிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா

 

பழனியில் அருணகிரிநாதர் கோவிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.

பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனம் அமைந்துள்ளது.

இங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீமத் அருணகிரிநாதர் சுவாமிகள் சன்னதிக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக மகா கணபதி பூஜை நடத்தப்பட்டு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் மூலம் கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.

பின்னர் அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

திருப்பணி குழு தலைவர் வேதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவில் கணக்கன்பட்டி சத்திரப்பட்டி ஆயக்குடி ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பெரியோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What do you think?

150 சிவனடியார்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணம்

தேத்தாம்பட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா