in

 திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம் 

 திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம் 

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பிரசித்திப்பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் 1.கோடியே 43 லட்சத்தில் தயாரான திருத்தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருக்கருகாவூர் பிரசித்திப்பெற்ற ஶ்ரீ முல்லைவனநாதர் உடனுறை ஶ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலுக்கு 2022-2023 சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பின்படி ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் சுவாமி அம்பாளுக்கு இரண்டு புதிய தேர் செய்யப்பட்டு அதன் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மாபேட்டை முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார்,செயல் அலுவலர் விக்னேஷ்,திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் ஆய்வாளர் லட்சுமி. மற்றும் அறங்காவலர் குழுவினர் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள். கிராமவாசிகள், பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

What do you think?

வெளிநாட்டவர்களுக்கு தமிழக பாரம்பரிய உணவு முறையில் விருந்து அளித்து உபசரிப்பு

கொறடா தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் மீனாட்சி சுந்தரம் 5ம் ஆண்டு நினைவு தினம்