in

காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் பணி புறக்கணிப்பு செய்து மறியல் போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் பணி புறக்கணிப்பு செய்து மறியல் போராட்டம்

 

காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாய் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று பணியினை புறக்கணித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

What do you think?

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் திடீர் புகை: பயணிகள் அச்சம்  பெரும் சேதம் தவிர்ப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்