அன்பில் ஈகோ இருக்காது… கமல் மன்னிப்பு கேட்கலாம்
ThugLife இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற உரைக்கு கர்நாடகாவில் கண்டனம் வலுக்க அவரது படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில் கமலஹாசனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க ஒரு சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
கமலோ….அன்புக்கு மன்னிப்பு கிடையாது என்று மறுத்துவிட்டார். தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்கள் கமலஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கர்நாடகாவில் ThugLife வெளியாகவில்லை என்றால் கன்னட படம் ஒன்றுகூட தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
கமலுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னால் எம் பி யும் நடிகையும்மான திவ்யா x தளத்தில் வெளியிட்டபதிவில் கமலஹாசன் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்தும் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார் மொழிகள் ஒரே வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது .
அவர் பேசியதை மன்னிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் அன்பு மன்னிப்பு கேட்காத என்று கமல் கூறியதை பதிவிட்டு இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் அன்பில் ஈகோ ஒன்று இருக்கவே இருக்காது ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.


