ஊத்துக்காடு அருள்மிகு தேதி ஸ்ரீ எல்லம்மன் தேவஸ்தானம் தெப்பல் உற்சவம்
ஊத்துக்காடு அருள்மிகு தேதி ஸ்ரீ எல்லம்மன் தேவஸ்தானம் தெப்பல் உற்சவம் மற்றும் சிம்ம வாகனத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் வட்டத்திற்குட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தேவி ஸ்ரீ எல்லம்மன் தேவஸ்தானத்தில் அம்மன் சடல்முள் புறப்பாடு , தெப்பல் உற்சவம், பாரிவேட்டை மற்றும் இரவு சிம்ம வாகனத்தில் வண்ண வண்ண பிரம்மாண்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கு தூக்கி , ஊஞ்சல் சேவையில் கோடான கோடி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் வழங்கினார்.
மேலும் பக்தர்களும் அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தி விட்டு கற்பூரம் தீபம் ஆரத்தி எடுத்து அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர் .
மேலும் ஊத்துக்காடு எல்லம்மன் திருவிழாக்கு வந்திருந்த பக்தர்களுக்கு குடிநீர் , உணவு உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான வசதிகளை பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்த ஊத்துக்காடு அருள்மிகு தேதி ஸ்ரீ எல்லம்மன் தேவஸ்தானம் அறங்காவலர்கள் ஜிகே.பாஸ்கர் நாயுடு , பி.சாந்தி என்கின்ற சாந்தலட்சுமி, ஜி.சீனிவாசன் நாயுடு, என்எஸ்.விஜயகுமார் நாயுடு, எம்.உமாசங்கர் நாயுடு, நந்தகுமார் ஆகியோர் வெகு சிறப்பாக செய்தனர் மேலும் வந்திருந்த பக்தர்களுக்கு வாலாஜாபாத் காவல் துறையினர் சார்பாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது .